Sunday, August 4, 2019

வீரத்தாலாட்டு

காலைக் கதிரே,கண்ணுறங்கு என் உயிரே


இரவு மதியே, நீ  உறங்கு இமை மூடி

பெண்பிள்ளை உனக்குத் தான் வீரமூட்ட நான் இருக்கேன்

பூச்சாண்டி வந்தாலும் பயமில்லை நீ உறங்கு

பூதமது வந்தாலும் துரத்திடலாம்,பூந்தேனே  நீ உறங்கு

பாதகனைக் கண்டால் நையப்புடைத்திடலாம், நன்றாக நீஉறங்கு

ஆபத்து வந்திட்டா அழுது புலம்பாம  அடுத்தவரை நாடாம

அடித்து நொறுக்கம்மா உனை நீ காத்துக்கொள்ளம்மா

சட்டம் மதித்து நடந்திடம்மா,  சத்தியத்திற்கு தலைகுணிந்திடம்மா

உன்னை காக்க நீ இருக்க கவலையில்லை நீ உறங்கு......

கருவே நீ கலைந்ததேனோ.....

வாடாமல்லியே என் கருவில் வாடி நீ போனதேனோ

என் உயிரில் பூத்திட்ட முதல் பூவே

எங்க நீ இருக்க சேதி ஒன்னு அனுப்பி வையி 

உன் தாயி நானுமிங்கே உனக்காக காத்து நிக்கேன்

உன் கூட நானும் வாரேன் என்னை கொஞ்சம் கூட்டி போயேன்.....




Friday, August 2, 2019

டாஸ்மாக் (tasmac)



மதுவை அவன் குடிச்சி


மாது என்னை அவனடிச்சு

குடும்பத்தை குலைத்திட்டான்

இன்னல் பல கொடுத்திட்டான்

அவன் குடிக்க பணம் தேடி

பிறர்மனை புகுந்திட்டான்

குடி உன் குடியையும் ஊரான் குடியையும்

கெடுக்கும் என்றெழுதுங்கள் மதுபாட்டில்களில்

இது ஓருவன் குடிப்பதை மற்றவன் தடுக்க வகைசெய்யும்

முதல்வரே எனக்கு மூத்தவரே

பாரை கொஞ்சம் மூடுமய்யா

தங்கச்சி  இவள் தாலிக்கு

வேலி கொஞ்சம் போடுமய்யா.....

அன்னை







நித்தம்  என் நித்திரையில்

நீ தான்  என் சொப்பனத்தில்

அம்மா என்றிடுவாய் 

அணைத்து நீ முத்தமிடுவாய்

அமுதே துள்ளி வந்திடுவாய், 

துளிர்த்திடுவாய் என்கருவில்

        என் உயிரை உணவாக்கி ஊட்டி விட காத்திருக்கேன்

    உன் விழிநோக்க உசுரோட உனக்காக நான் இருக்கேன்... .

Thursday, August 1, 2019

மதியே வந்திடுவாய் ...

                   மதியே வந்திடுவாய்


என் சோகம் தீர்த்திடுவாய்

மருத்துவமனை பல சென்று

மருந்துகள் பல தின்று

நாட்காட்டியை தோழியாக்கி

உன் வருகைக்காக காத்திருக்கிறேன் 

மெழுகாய் உருகி

வருடம் இரண்டாச்சு வராமல் போனதேன்  

என் உயிரே வரமாய் வந்திடுவாய் 

என் உயிர் காத்திடுவாய் என் கருவறை தோட்டத்திலே 

மலராய் மலர்ந்திடுவாய் ....

உன் அன்னை நான் இங்கே உனக்காக ஏங்கி 

நிக்கேன்.......

Wednesday, July 31, 2019

குப்பைத்தொட்டி தாயம்மா...

உதிரம் சிந்தி பெற்றவளோ
உன்னில் தூக்கி எறிந்தாள் என்னை குப்பையாய் 
ஊரை தூய்மையாக்கிட உன்னை அசுத்தமாக்கி கொண்டவளே
கருவறை இல்லா தாய் நீ
உயிரில்லா உறவு நீ

நான் தூங்க  மடி தந்த தாயம்மா நீ..






Thursday, July 4, 2019

உயிரடா நீ எனக்கு

என் கண்கள் உன்னை காணும் போதெல்லாம்
 ஆனந்த கூத்தாடுகிறது என்னுள் மழலை
  தன்
 தேடுவது போல்
உன்னையே தேடுகிறது எனதுள்ளம்
அப்பழுக்கற்ற என் பாசத்திற்கு உவமை
சொல்ல ஒன்றுமில்லை இவ்வுலகில்
அத்தனையும் சத்தியமடா
உயிரடா நீ எனக்கு...

Wednesday, July 3, 2019

வானம் வசப்படும்

சொந்தங்கள் வருத்திட
சோகங்கள் துரத்திட
சோர்ந்து விடவில்லை நான்
தன்னம்பிக்கை உளி கொண்டு
தடைகளை தகர்தெறிகின்றேன்
ஒருநாள் வானம் வசப்படும்
வானவிலும் மாலையாகும் ...

Tuesday, July 2, 2019

வன்கொடுமை

நாடு தாண்டி காடு சென்று வாழ்ந்திட
துடிக்கிறது என் மனம் ,எத்தனையாயிரம்
ஆறுதல் கூறினும் ஏற்க மறுக்கிறது
பெண் குழந்தை பிறந்தால் வரதட்சனை கொடுமை
என்பது மாறி பூமியில் வாழ்வதே கடுமை என்றானது
கண்ணகியாய் வெகுண்டெழுந்து கயவர்களை
சாம்பலாக்கிட துடிக்கிறது நெஞ்சம்
நாட்டில் உடனிருந்து சிரித்துக் கொண்டே
நமக்கு நஞ்சூட்டும் மக்களை விட மாக்களே சிறந்தது...

Tuesday, June 25, 2019

முதுமைக்காதல்


திருமணத்தன்று பாப்பா என்றழைத்தான் செல்லமாக
தட்டித்தடுமாறும்  முதிர்கிழவியானேன்
இன்றும் பாப்பா என்கிறான் பாசத்தினால்
முதிர் கிழவியாயினும் நானே அவன் கண்களுக்கு பேரழகி
இளமைபருவத்தில் ஓடி ஒளிந்து விளையாடினோம்
இன்றோ என்னால் ஓட முடியவில்லை குழந்தையாகி
தவழ்ந்து சென்று ஒளிந்து கொள்கின்றேன் அவன்
பாசப்பிடியிலிருந்து தப்பித்து கொள்ள...

கம்பனும் புதிதாய் பிறந்து  எங்களின் காதல் கவி
  பாட ஆசை  கொள்வான்......
பிக்காசோவும் அடம்பிடிப்பான் எங்களின்
காதலை ஓவியமாக்கிட.....
ஷேக்ஸ்பியரும் எங்கள் காதல் கதை எழுத
ஆர்வம் கொண்டிடுவான்....


எதிர்காலம்

என்னவனே எதிர்காலத்தில் உன் மார்பில்
துயில் கொள்வேனோ இல்லை
கல்லறையில் நித்திரை கொள்வேனோ
என்றெண்ணி என் தூக்கம் தொலைத்து
நிற்கின்றேன் கண்ணீருடன்....

Saturday, June 22, 2019

காதல்...

என்னவனின் கொஞ்சல்களை மட்டும் அல்ல
அவனின் கோபங்களையும் ரசிப்பேன்
படபடவென பேசும் அவன் உதடுகள்
நொடிபொழுதில் எனை நோக்கி  புன்னகைக்கும்
கோபக்கனலை வீசிய அவனது கண்களில்
நொடிப்பொழுதில் காதல் வழிந்தோடும்
 யாரோடு விதிசேர்க்கும் என்னை என
எண்ணி கலங்கி நின்றேன், இக்கணம்
மகிழ்ந்திருக்கிறேன் உன்னால்..

உன்னை தெரியாது...

உள்ளொன்று வைத்து புறம்
 ஒன்றுபேச தெரியாது எனக்கு
இருந்தும் பேசினேன் உள்ளுக்குள்
உன்னை வைத்ததால் என்
கோபக்கார அண்ணணிடம்
உன்னை தெரியாது என்று...

ஆசை எனக்கு...

நீல வானே உன்னை சுருட்டி
சேலையாய் உடுத்திட ஆசை எனக்கு...
நட்சத்திரங்களையும் நிலவையும்
என் கூந்தலை அலங்கரிக்கும்
பூக்களாய் சூடிட ஆசை எனக்கு..

உன்னில் தோன்றும் மின்னல் கீற்றுகளில்
ஊஞ்சல்  ஆடிட ஆசை எனக்கு
மழைத்துளியுடன் கலந்து விண்ணிலிருந்து
மண்ணுக்கு சறுக்கி விளையாடிட ஆசை எனக்கு

நிலவில் வடை சுடும் பாட்டியுடன்
கதைகள் பல பேசிட ஆசை
ஆசை ஆசை பேராசை கொண்டேன் உன் மேல்....

Monday, June 17, 2019

பணம் தின்னும் பிணம்

பணம் தேடி அலையும் மானிடா
நாளை உன் சந்ததி
பணம் தின்று பிணமாக காத்திருக்கி றார்கள்
நீர் ்இன்றி....
                                                                by
                                                       tajasan

நேற்று,இன்று

நேற்று தண்ணீரை சிந்தினோம்
இன்று கண்ணீர் சிந்துகின்றோம்
மக்களே திருந்துங்கள் ,இனியாவது,
நீங்கள்வீணாக்குவது நீர்த்துளிகளைல்ல
உங்களின் உதிரத்துளிகளை .....




                                                           by
                                                            tajasan

Thursday, May 30, 2019

மூச்சிரைக்க ஓடி

நீ இல்லாத நேரத்தில் நகராத
 கடிகார முட்கள்
நீ  என்னுடன் இருக்கும் போது
மூச்சிரைக்க ஓடுவதேனோ ...

by
taj asan

உனக்கான என் காதல்



உனக்கான என் காதல் என் உடலை

உயிர் இழக்கும் வரை மட்டும் அல்ல

இவ்வுலக பூக்களெல்லாம்  அதன் 

மணம்   இழக்கும் வரையில்

வாழ்ந்து கொண்டே இருக்கும் ... .
                                     
                                                                                                                                                                                                                                                                                                                                                                        Taj asan                       

Friday, May 24, 2019

அரக்க பெண்னே

அன்று துளிர்விட்ட அரும்பினை

கொண்டு வீச துணிவு எங்கிருந்து

கொண்டாய் அரக்க பெண்ணே

சென்றுபார் குழந்தை வரம் வேண்டி

கோவில்களிலும் மருத்துவமணைகளிலும்

தவம் கிடக்கும் அன்பு தேவதைகளை....

                                                            by
                                       taj asan

Thursday, May 23, 2019

கடல் கடந்த காதல்



கடல் கடந்து சென்றும் என்  காதலை மறக்க 

முடியவில்லை என்றாய் நீ கடந்தது





கடலை தான் என்னை அல்ல... .. .

                                     by
                      taj asan

Wednesday, May 22, 2019

என்னவன்

ஓளவையும் அடம்பிடிப்பாள் என்னவனின் 

கை பிடிக்க... ...



                           by 
                               
                                taj asan

மதியே வந்திடுவாய் ...

                   மதியே வந்திடுவாய் என் சோகம் தீர்த்திடுவாய் மருத்துவமனை பல சென்று மருந்துகள் பல தின்று நாட்காட்டியை தோழியாக்கி...