Tuesday, June 25, 2019

முதுமைக்காதல்


திருமணத்தன்று பாப்பா என்றழைத்தான் செல்லமாக
தட்டித்தடுமாறும்  முதிர்கிழவியானேன்
இன்றும் பாப்பா என்கிறான் பாசத்தினால்
முதிர் கிழவியாயினும் நானே அவன் கண்களுக்கு பேரழகி
இளமைபருவத்தில் ஓடி ஒளிந்து விளையாடினோம்
இன்றோ என்னால் ஓட முடியவில்லை குழந்தையாகி
தவழ்ந்து சென்று ஒளிந்து கொள்கின்றேன் அவன்
பாசப்பிடியிலிருந்து தப்பித்து கொள்ள...

கம்பனும் புதிதாய் பிறந்து  எங்களின் காதல் கவி
  பாட ஆசை  கொள்வான்......
பிக்காசோவும் அடம்பிடிப்பான் எங்களின்
காதலை ஓவியமாக்கிட.....
ஷேக்ஸ்பியரும் எங்கள் காதல் கதை எழுத
ஆர்வம் கொண்டிடுவான்....


எதிர்காலம்

என்னவனே எதிர்காலத்தில் உன் மார்பில்
துயில் கொள்வேனோ இல்லை
கல்லறையில் நித்திரை கொள்வேனோ
என்றெண்ணி என் தூக்கம் தொலைத்து
நிற்கின்றேன் கண்ணீருடன்....

Saturday, June 22, 2019

காதல்...

என்னவனின் கொஞ்சல்களை மட்டும் அல்ல
அவனின் கோபங்களையும் ரசிப்பேன்
படபடவென பேசும் அவன் உதடுகள்
நொடிபொழுதில் எனை நோக்கி  புன்னகைக்கும்
கோபக்கனலை வீசிய அவனது கண்களில்
நொடிப்பொழுதில் காதல் வழிந்தோடும்
 யாரோடு விதிசேர்க்கும் என்னை என
எண்ணி கலங்கி நின்றேன், இக்கணம்
மகிழ்ந்திருக்கிறேன் உன்னால்..

உன்னை தெரியாது...

உள்ளொன்று வைத்து புறம்
 ஒன்றுபேச தெரியாது எனக்கு
இருந்தும் பேசினேன் உள்ளுக்குள்
உன்னை வைத்ததால் என்
கோபக்கார அண்ணணிடம்
உன்னை தெரியாது என்று...

ஆசை எனக்கு...

நீல வானே உன்னை சுருட்டி
சேலையாய் உடுத்திட ஆசை எனக்கு...
நட்சத்திரங்களையும் நிலவையும்
என் கூந்தலை அலங்கரிக்கும்
பூக்களாய் சூடிட ஆசை எனக்கு..

உன்னில் தோன்றும் மின்னல் கீற்றுகளில்
ஊஞ்சல்  ஆடிட ஆசை எனக்கு
மழைத்துளியுடன் கலந்து விண்ணிலிருந்து
மண்ணுக்கு சறுக்கி விளையாடிட ஆசை எனக்கு

நிலவில் வடை சுடும் பாட்டியுடன்
கதைகள் பல பேசிட ஆசை
ஆசை ஆசை பேராசை கொண்டேன் உன் மேல்....

Monday, June 17, 2019

பணம் தின்னும் பிணம்

பணம் தேடி அலையும் மானிடா
நாளை உன் சந்ததி
பணம் தின்று பிணமாக காத்திருக்கி றார்கள்
நீர் ்இன்றி....
                                                                by
                                                       tajasan

நேற்று,இன்று

நேற்று தண்ணீரை சிந்தினோம்
இன்று கண்ணீர் சிந்துகின்றோம்
மக்களே திருந்துங்கள் ,இனியாவது,
நீங்கள்வீணாக்குவது நீர்த்துளிகளைல்ல
உங்களின் உதிரத்துளிகளை .....




                                                           by
                                                            tajasan

மதியே வந்திடுவாய் ...

                   மதியே வந்திடுவாய் என் சோகம் தீர்த்திடுவாய் மருத்துவமனை பல சென்று மருந்துகள் பல தின்று நாட்காட்டியை தோழியாக்கி...